ரூ.1¾ கோடியில் சாலை அமைக்கும் பணி


ரூ.1¾ கோடியில் சாலை அமைக்கும் பணி
x
தினத்தந்தி 4 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-05T00:15:35+05:30)

ரூ.1¾ கோடியில் சாலை அமைக்கும் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

பேய்குளம் முதல் பிரண்டார்குளம் வரையிலான சாலை அமைக்க ரூ.1 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து சாலை அமைக்கும் பணி தொடக்க விழா பேய்குளம் பஜாரில் நடந்தது. ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பணியை தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சங்கர், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பொன் பெருமாள், ஆர்.ஐ.சுப்பிரமணி, ஸ்ரீவெங்கடேஸ்வராயபுரம் ஊராட்சி தலைவர் பெரியசாமி ஸ்ரீதர், கருங்கடல் ஊராட்சி தலைவர் நல்லதம்பி, டாக்டர் ரமேஷ் பிரபு, ஆழ்வார்திருநகரி வட்டார காங்கிரஸ் தலைவர் கோதண்டராமன், பொருளாளர் பால்ராஜ், மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எடிசன், பேய்குளம் நகர தலைவர் தாமஸ் ஜெயக்கொடி தி.மு.க. கிளை செயலாளர் மகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story