2 பேரிடம் 1 கிலோ தங்கக்கட்டி மோசடி


2 பேரிடம் 1 கிலோ தங்கக்கட்டி மோசடி
x

கோவையில் நகை செய்து தருவதாக கூறி 2 பேரிடம் 1 கிலோ தங்கக்கட்டியை மோசடி செய்த நகை பட்டறை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் நகை செய்து தருவதாக கூறி 2 பேரிடம் 1 கிலோ தங்கக்கட்டியை மோசடி செய்த நகை பட்டறை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நகை பட்டறை உரிமையாளர்

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 47). இவர் கோவை இடையர்வீதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய உறவினர் ஆசிஸ் ஆசக் (40) தெலுங்குவீதியில் தங்க நகை பட்டறை வைத்து உள்ளார்.

பிரகாஷின் பட்டறையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவை சேர்ந்த சுஜித் மைத்தி (30) என்பவர் தொழிலா ளியாக வேலை பார்த்து வந்தார். பின்னர் அவர் செட்டிவீதியில் சொந்தமாக நகை பட்டறை வைத்து நடத்தி வந்தார்.

1 கிலோ தங்க கட்டி மோசடி

இந்தநிலையில் பிரகாஷ், ஆசிஸ் ஆசக் ஆகியோர் தங்களின் பட்டறை யில் போதிய ஆட்கள் இல்லாததால் சுஜித் மைத்தியிடம் நகைகளை செய்ய கொடுத்து வந்தனர்.

அதன்படி கடந்த மே மாதம் சுஜித் மைத்தியிடம் பிரகாஷ் மற்றும் ஆசிஸ் ஆதிக் ஆகியோர் 1 கிலோ 150 கிராம் தங்க கட்டியை நகை செய்வதற்காக கொடுத்தனர்.

அதை வாங்கிய அவர் பட்டறையை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், சுஜித்மைத்தியின் செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர்கள் வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் சுஜித் மைத்தி மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் வழக்கு பதிவு செய்தார்.

போலீஸ் வலைவீச்சு

சுஜித் மைத்தியை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. சுஜித்மைத்தி மீது கடந்த வாரம் 998 கிராம் தங்கக் கட்டியை வாங்கி மேசடி செய்து விட்டதாக 4 பேர் அளித்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதன் மூலம் அவர் ரூ.1½ கோடி மதிப்பிலான 3 கிலோ தங்க கட்டியை மோசடி செய்துவிட்டு தலைமறைவான சுஜித்மைத்தியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story