விமான கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 1 கிலோ தங்கம்


விமான கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 1 கிலோ தங்கம்
x

விமான கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 1 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

திருச்சி

செம்பட்டு,மே.22-

திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று சிங்கப்பூரிலிருந்து இன்டிகோ விமானம் வந்தது. இந்த விமானம் மீண்டும் திருச்சியில் இருந்து ஐதராபாத் வழியாக புதுடெல்லி செல்வதற்காக தயார் நிலையில் இருந்தது. இந்தநிலையில் விமானத்தை ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, விமானத்தில் உள்ள கழிவறையில் ஒரு கைப்பை கேட்பாரற்று கிடந்தது. இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் விரைந்து வந்து கைப்பையை பிரித்து பார்த்ததில் அதில் ஒரு கிலோ தங்கம் இருந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அதனை கைப்பற்றினர். சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த மர்மநபர்கள், அதிகாரிகளின் சோதனையில் சிக்கி விடுவோம் என பயந்து அதனை அங்கு போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். தங்கத்தை விமானத்தில் விட்டுச் சென்ற பயணி குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story