ரூ.1¼ லட்சம் செல்போன்கள் திருட்டு


ரூ.1¼ லட்சம் செல்போன்கள் திருட்டு
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1¼ லட்சம் செல்போன்கள் திருட்டு

கோயம்புத்தூர்

கோவை

கோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் பாருக்(வயது 47). கோவை-திருச்சி ரோட்டில் உள்ள சுங்கம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பாருக் சம்பவத்தன்று இரவு தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்த நிலையில் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான செல்போன்களை காணவில்லை. அவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story