மூதாட்டியிடம் 1½ பவுன் சங்கிலி பறிப்பு


மூதாட்டியிடம் 1½ பவுன் சங்கிலி பறிப்பு
x

மூதாட்டியிடம் 1½ பவுன் சங்கிலி பறிப்பு

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கமலா (வயது 74). நேற்று இரவு தனது வீட்டு திண்ணையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் 2 பேர் கம்பி வேலியில் ஏறிக்குதித்து உள்ளே புகுந்து கமலா கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறிக்க முயன்றனர்.

அப்போது மூதாட்டி நகையை பிடித்து கொண்டார். ஆனாலும் 9 கிராம் நகை மற்றும் காதில் கிடந்த 3 கிராம் தோட்டை பிடித்து இழுத்ததில் காது அறுந்து ரத்த காயம் ஏற்பட்டது. அப்போது மூதாட்டி சத்தம் போட்டுள்ளார். இதனை பார்த்த மூதாட்டி பேத்தி ஓடிவந்து பார்த்த போது, மர்மநபர்கள் 1½ பவுன் நகைகளை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில் காயமடைந்த கமலா மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கமலா கொடுத்த புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story