கோட்டூரில் வீட்டின் பூட்டை உடைத்து 1½ பவுன் நகை திருட்டு-மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கோட்டூரில் வீட்டின் பூட்டை உடைத்து 1½ பவுன் நகை திருட்டு-மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கோட்டூர்
ஆனைமலையை அடுத்த கோட்டூர் அருகே வேட்டைக்காரன் கோவில் வீதி ஐஸ்வர்யா நகர், ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் அபுதாஹீர். டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சஜினா பேகம். ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று பள்ளி விடுமுறை என்பதால் மகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி விட்டு காலை 11 மணி அளவில் கணவன் -மனைவி இருவரும் பொள்ளாச்சிக்கு வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் அன்று இரவு 10 மணி அளவில் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் 2 பேரும் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 1½ பவுன் தங்க நகை, 120 கிராம் வெள்ளி கொலுசு, விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை காணவில்லை. இதனால் மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் செல்போனை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.