லாரியில் கடத்த முயன்ற 1¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


லாரியில் கடத்த முயன்ற 1¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

பந்தலூரில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 1¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூரில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 1¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரிசியை பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலை கொடுத்து வாங்கி, கேரளாவிற்கு கடத்தி சென்று சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

கோவை, நீலகிரி மாவட்டங்கள் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவது, தற்போது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவ்வப்போது கடத்தல் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

வாகன சோதனை

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அம்பலமூலா வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது பந்தலூரில் இருந்து மிக வேகமாக ஒரு மினி லாரி வந்தது. அந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் லாரியை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அம்மன்காவு பகுதியை சேர்ந்த ஜோபின்(வயது 26) என்பது தெரியவந்தது.

1¾ டன் பறிமுதல்

இதையடுத்து லாரியில் ஏறி போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. மொத்தம் 1,700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. உடனே ரேஷன் அரிசியுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அதை கடத்த முயன்ற ஜோபினை பிடித்து, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story