தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த 1½ வயது குழந்தை சாவு


தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த 1½ வயது குழந்தை சாவு
x

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த 1½ வயது குழந்தை உயிரிழந்தது.

திருச்சி

திருச்சி உறையூர் ராமலிங்க நகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் குணசேகர் (வயது 33). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யபாரதி (31). இவர்களுக்கு சன்வந்த் என்ற 1½ வயது ஆண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று குழந்தை சன்வந்த் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் மாடிப்படியின் கீழ் உள்ள 3 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை தவறி விழுந்தது. இதில் தொட்டியில் நிரம்பியிருந்த தண்ணீரில் மூழ்கியபடி குழந்தை தத்தளித்தது. இதனை பார்த்த சன்வந்தின் தாத்தா அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், மூச்சுத் திணறி குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திவ்யபாரதி கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story