பாலக்கோடு அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் 10 ஆடுகள் செத்தன

பாலக்கோடு அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் 10 ஆடுகள் செத்தன.
தர்மபுரி
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தளவாய்அள்ளி புதுரை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 55), விவசாயி. இவர் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய செம்மறி ஆடுகளை வீட்டின் பின்புறம் உள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். சிறிது நேரத்தில் பட்டியில் இருந்த ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்தார். அங்கு 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டமாக ஆடுகளை கடிப்பதை கண்டு கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து நாய்களை விரட்டி அடித்தனர். இதில் 5 செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மேலும் 10 ஆடுகள் பலத்த காயமடைந்தன. இது குறித்து வனத்துறையினர் மற்றும் பாலக்கோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






