10 ஆக்சிஜன் படுக்கைகள் தயார்
10 ஆக்சிஜன் படுக்கைகள் தயார்
கோயம்புத்தூர்
கிணத்துக்கடவு
சீனாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முதற்கட்டமாக 10 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் தயார் நிலையில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் போதுமான ஆக்சிஜன் இருப்பும் உள்ளது. இதேபோன்று மருந்து-மாத்திரைகள், ஊசிகள் போதிய அளவில் உள்ளதோடு மருத்துவ பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். ஆஸ்பத்திரியில் கூடுதலாக 40 படுக்கைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் வேலுமணி தலைமையில் டாக்டர் சமீர், சண்முக பிரியதர்சினி ஆகியோர் கொண்ட குழுவினர் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்கள்.
Related Tags :
Next Story