கோபி அருகே பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது


கோபி அருகே பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது
x

கோபி அருகே பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே கள்ளிப்பட்டி ரோட்டில் உள்ள தடப்பள்ளி வாய்க்கால் வெள்ளை முனியப்பன் கோவில் பகுதியில் கோபி போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். இதனால் போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் கோபியை சேர்ந்த கருப்புசாமி (வயது 50), வடிவேல் (40), வெள்ளியங்கிரி (52) உள்பட 10 பேர் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சூதாட பயன்படுத்தப்பட்ட ரூ.7 ஆயிரத்து 470 பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Related Tags :
Next Story