தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 10 பேர் கைது


தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 10 பேர் கைது
x

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 10 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.

செங்கல்பட்டு

தாம்பரம் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரி போலீஸ் சரகத்தில் உள்ள ஓட்டேரி, வண்டலூர், ஊரப்பாக்கம், பொத்தேரி, மறைமலைநகர் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக பொதுமக்களிடமிருந்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்படி கூடுவாஞ்சேரி உதவி போலீஸ் கமிஷனர் ஜெயராஜ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக வண்டலூர், ஓட்டேரி, பொத்தேரி மறைமலைநகர், கூடுவாஞ்சேரி பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். ஒரு சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக ஊரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 31), ஊரப்பாக்கம் ரேவதிபுரம் பகுதியை சேர்ந்த முகமது (46), கண்டிகையை சேர்ந்த செல்வம் (56), நெல்லை பகுதியை சேர்ந்த நிஜாம் (34), கேரளாவை சேர்ந்த அப்துல் ரஷீத் (39), அசாம் மாநிலத்தை சேர்ந்த பக்ருதீன் (24), குஞ்சு மொய்தீன் (45), கூடுவாஞ்சேரியை சேர்ந்த பிரவீன் குமார் (36), மறைமலைநகர் பகுதியை சேர்ந்த ரவி (37), பொத்தேரி பகுதியை சேர்ந்த பவித்ரன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றினர். இதுகுறித்து ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Next Story