மது விற்ற 10 பேர் கைது


மது விற்ற 10 பேர் கைது
x

மது விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் மாவட்ட மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மண்மங்கலத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 44), சோழியப்பன் (68), துறையூரை சேர்ந்த தயாளன் (38), குஜிலியம்பாறையை சேர்ந்த அழகர்சாமி (35), சிவகங்கையை சேர்ந்த கார்த்திகேயன் (52), கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (38), புதுக்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன் (49), பாலப்பட்டியை சேர்ந்த சுப்ரமணி (60), ஆலந்துறையை சேர்ந்த குழந்தைசாமி (60), குளித்தலையை சேர்ந்த கன்னியம்மாள் (60) ஆகிய 10 பேரும் பல்வேறு இடங்களில் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 76 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story