10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அமைச்சு பணியாளர்கள்


10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அமைச்சு பணியாளர்கள்
x

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சு பணியாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.

கரூர்

மருத்துவ பரிசோதனை

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறை அமைச்சு பணியாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். கூடுதல் அமைச்சு பணி இடங்களை வழங்கிட வேண்டும். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அமைச்சு பணியாளர்களுக்கு ஈட்டுப்படி வழங்கிட வேண்டும்.

இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பும் போது மேற்கொள்ளப்படும் கருணை அடிப்படையிலான பணி நியமன விகிதசாரத்தினை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். முழு உடல் மருத்துவ பரிசோதனை திட்டத்தினை அமைச்சு பணியாளர்களுக்கு விரிவுப்படுத்த வேண்டும். போலீசார் குடியிருப்புகளில் அமைச்சு பணியாளர்களுக்கு 10 சதவீதம் குடியிருப்பு வழங்க வேண்டும். சிறு தண்டனைகளை ரத்து செய்திட வேண்டும்.

மாதாந்திர கூட்டம்

ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.-ல் உள்ள குளறுபடிகளை சரி செய்ய மாநிலம் தழுவிய மாதாந்திர கூட்டம் நடத்திட வேண்டும். நேரடி உதவியாளர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும். கணினி விவர பதிவாளர்களை ஒரு முறை நிகழ்வாக இளநிலை உதவியாளர்களாக பணியமர்த்த வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், என்று அமைச்சு பணியாளர்கள் தெரிவித்தனர்.


Next Story