தமிழகத்தில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல் - அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

கோப்புப்படம்
போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் 10 கல்லூரிகள் அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கவில்லை.
சென்னை,
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் அங்கீகாரம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கு முன்னர் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதியை பெற வேண்டும்.
இந்த நிலையில் தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அங்கீகாரம் பெறுவதற்கு 10 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கவில்லை. இதனால் வரும் கல்வி ஆண்டு முதல் அந்த 10 தனியார் பொறியியல் கல்லூரிகளும் மூடப்படுகின்றன. அந்த 10 பொறியியல் கல்லூரிகளின் பெயர்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
Related Tags :
Next Story