10 ரூபாய் நாணயத்தை கடைகள், வணிக நிறுவனங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

10 ரூபாய் நாணயத்தை கடைகள், வணிக நிறுவனங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
x

10 ரூபாய் நாணயத்தை கடைகள், வணிக நிறுவனங்கள் வாங்கிக்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர், ஜூலை.13-

10 ரூபாய் நாணயத்தை கடைகள், வணிக நிறுவனங்கள் வாங்கிக்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் பஸ்களில் பயணிக்கும் போது மற்றும் அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகளில் பொருட்கள் வாங்குகின்ற போதும் தங்களிடம் உள்ள 10 ரூபாய் நாணயத்தை கொடுப்பதாக இருந்தாலும் அல்லது மற்றவர்களிடமிருந்து நாம் பெறுவதாக இருந்தாலும் அவசியம் பெற்றுக்கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் 10 ரூபாய் நாணயத்தை அனைத்து இடங்களிலும் பெற்றுக்கொள்ளுமாறும், மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயம் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் செல்லதக்கதாகும் என்றும் கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story