துருக்கி நாட்டு மக்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் ரூ.10 ஆயிரம் நிதி உதவி


துருக்கி நாட்டு மக்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் ரூ.10 ஆயிரம் நிதி உதவி
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டு மக்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் ரூ.10 ஆயிரம் நிதி உதவி கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் வழங்கினர்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 376 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அந்த மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து சுய தொழில் தொடங்க 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் கடனுக்கு அரசு மானியமாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் சங்கராபுரம் தாலுகா சின்னமணியந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வசுலான ரூ.10 ஆயிரத்து 500-ஐ மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் கலெக்டரிடம் வழங்கினர்.

முன்னதாக மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இருக்கைக்கு சென்று 12 பேரிடம் மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story