கிராம கோவில் பூசாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் மாத ஊக்கத்தொகை


கிராம கோவில் பூசாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் மாத ஊக்கத்தொகை
x
தினத்தந்தி 12 Feb 2023 7:15 PM GMT (Updated: 2023-02-13T16:12:47+05:30)

கிராம கோவில் பூசாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் மாத ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தல்

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் வளாகத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை மற்றும் அருள் வாக்கு அருள்வோர் பேரவை கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட அமைப்பாளர் சின்னப்பா தலைமை தாங்கினார். தர்மராஜ், மாணிக்கம், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமையன் வரவேற்றார். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் முத்துசாமி நன்றி கூறினார்.


Next Story