ஓமலூரில் 25-ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும்


ஓமலூரில் 25-ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும்
x

மின்கட்டண உயர்வை கண்டித்து வருகிற 25-ந் தேதி ஓமலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் இளங்கோவன் பேசினார்.

சேலம்

ஓமலூர்:-

மின்கட்டண உயர்வை கண்டித்து வருகிற 25-ந் தேதி ஓமலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் இளங்கோவன் பேசினார்.

ஆலோசனை கூட்டம்

மின்கட்டண உயர்வை கண்டித்து வருகிற 25-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மணி எம்.எல்.ஏ. வரவேற்றார்.

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செம்மலை, எம்.எல்.ஏ.க்கள் ஜெய்சங்கர், சித்ரா, நல்லதம்பி, ராஜமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புறநநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் பேசுகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கரத்தை வலுப்படுத்தும் வகையில் ஓமலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் அதிக எம்.எல்.ஏ.க்களை வெற்றி பெறச் செய்த அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்த பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பது,

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டு விட்டது. எனவே காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். மின்கட்டண உயர்வை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ள செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அசோகன், கோவிந்தராஜ், சேரன் செங்குட்டுவன், சுப்பிரமணியம், மணிமுத்து, மணி, ராஜசேகரன், சேகர், ராமசாமி, மோகன், சதீஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story