போதை மாத்திரை கடத்தல் வழக்கில் ஆந்திர வாலிபருக்கு 10 ஆண்டு சிறை - சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


போதை மாத்திரை கடத்தல் வழக்கில் ஆந்திர வாலிபருக்கு 10 ஆண்டு சிறை - சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x

போதை மாத்திரை கடத்தல் வழக்கில் ஆந்திர வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு 2020-ம் ஆண்டு வந்த பார்சலை சோதனையிட்ட சுங்கத்துறை அதிகாரிகள் அதில் போதை மாத்திரைகள் இருப்பதை கண்டு பிடித்தனர். இதையடுத்து விமானம் மூலமாக பார்சலில் போதை மாத்திரைகளை கடத்த முயன்றதாக ஆந்திர மாநிலம் பீமாவரம் பகுதியைச் சேர்ந்த குரெல்லா பானுசந்தர் (வயது 29) என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன்பாக நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் வக்கீல் என்.சுரேஷ்குமார் ஆஜராகி வாதி்ட்டார். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட குரெல்லா பானுசந்தருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.


Next Story