இந்திலியில் திருநங்கைகளுக்கு ரூ.7¾ லட்சத்தில் 100 ஆடுகள்: கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்


இந்திலியில் திருநங்கைகளுக்கு ரூ.7¾ லட்சத்தில் 100 ஆடுகள்: கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்
x
தினத்தந்தி 26 Aug 2023 6:45 PM GMT (Updated: 26 Aug 2023 6:45 PM GMT)

இந்திலியில் திருநங்கைகளுக்கு ரூ.7¾ லட்சத்தில் 100 ஆடுகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே இந்திலியில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவமனை மருந்தக வளாகத்தில் மகளிர் உரிமைத்துறை மற்றும் மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டம் 2017-2018-ம் ஆண்டின் கீழ் திருநங்கைகள் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, கால்நடை பராமரிப்பு துறை மூலம் ரூ.7 லட்சத்து 77 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் கந்தசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் கலந்து கொண்டு, ரூ.7 லட்சத்து 77 ஆயிரத்து 800 மதிப்பில், 10 திருநங்கைகளுக்கு தலா 10 ஆடுகள் வீதம் மொத்தம் 100 ஆடுகளை வழங்கி பேசினார். அப்போது இந்த ஆடுகளை வளர்த்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்று திருநங்கைகளிடம் கூறினார். நிகழ்ச்சியில் இந்திலி ஊராட்சிமன்ற தலைவர் கலா, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் திருநங்கைகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story