பவுர்ணமியையொட்டி, சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்


பவுர்ணமியையொட்டி, சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

பவுர்ணமியையொட்டி, சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சேலம்

சேலம்:

தமிழகத்தில் பொங்கல், தீபாவளி, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி பவுர்ணமி நாளில் திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கிரிவலத்திற்கு திருவண்ணாமலை செல்லும் பக்தர்களுக்காக ஒவ்வொரு அரசு போக்குவரத்துக்கழக கோட்டங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

அந்த வகையில் வைகாசி மாத பவுர்ணமியையொட்டி சேலம் கோட்டத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் சேலம் கோட்டம் சார்பில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) பவுர்ணமியையொட்டி இன்று (திங்கட்கிழமை) மதியம் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்குகிறது. சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 50 பஸ்களும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய இடங்களில் இருந்து 50 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன, என்றனர்.


Next Story