தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
தர்மபுரி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தா்மபுாி மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தா்மபுாியில் இருந்து சென்னை, பெங்களூரு உள்பட முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சேலத்தில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது. இதுபோல் பாலக்கோடு, அரூா், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, கிருஷ்ணகிாி, ஓசூா் பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தா்மபுாி மண்டலத்தில் இருந்து மொத்தம் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டல அதிகாாிகள் தொிவித்தனா்.
Related Tags :
Next Story