கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருடுபோன 100 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருடுபோன 100 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகளவில் செல்போன்கள் திருடு போவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலவலகத்திற்கு புகார் சென்றது. இதையடுத்து திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார், மாவட்டத்தில் செல்போன் திருட்டு வழக்கு குறித்து விசாரணை நடத்தி 100 செல்போன்களை மீட்டனர். இதையடுத்து மீட்கப்பட்ட செல்போன்களின் உரிமையாளர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் செல்போன்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் வழங்கினார். அப்போது மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், மாவட்ட குற்ற ஆவணகாப்பக பிரிவு துணை சூப்பிரண்டு லட்சுண குமார், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.