கோதண்டராமர் கோவிலில் 1,001 கலச திருமஞ்சனம்


கோதண்டராமர் கோவிலில் 1,001 கலச திருமஞ்சனம்
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் 1,001 கலச திருமஞ்சனம் நடந்தது.

திருவாரூர்

வடுவூர்:

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ஆடி மாதத்தையொட்டி 1.001 கலச திருமஞ்சனம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் வளாகத்தில் சீதாதேவி, லட்சுமணன் சமேதராக கோதண்டராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை தொடர்ந்து சாமிகளின் முன்பு 1,001 கலசங்களில் புனித நீர் வைத்து தீச்சதர்கள் பூஜை செய்தனர். ஹோம குண்டம் அமைத்து அதில் பல்வேறு விதமானமங்களப் பொருட்களை சமர்ப்பித்து யாகம் வளர்க்கப்பட்டது. இதையடுத்து சாமிக்கு 6 மணி நேரத்திற்கு மேலாக அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story