திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்


திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
x
தினத்தந்தி 28 Nov 2022 6:45 PM GMT (Updated: 28 Nov 2022 6:45 PM GMT)

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத 2-வது சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத 2-வது சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

1,008 சங்காபிஷேகம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில். கார்த்திகை மாத 2-வது சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக சிவபெருமான் சன்னதி முன்பு 1,008 சங்குகள் நெல் மணிகள் மீது அடுக்கி வைக்கப்பட்டு, அதில் பல்வேறு நறுமண பொருட்களாலான தீர்த்தம் நிரப்பப்பட்டது.இதனைத் தொடர்ந்து யாகம் நடந்தது. பின்னர் வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவேதாரண்யேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

பக்தர்கள் சாமி தரிசனம்

இதனையடுத்து 1,008 சங்குகளில் இருந்த புனித நீரால் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கோவில் அர்ச்சகர் திருஞானம் ஆகியோர் செய்திருந்தனர்.

ஜம்புகேஸ்வரர் கோவில்

இதேபோல கொள்ளிடம் அருகே வடரங்கம் ஜம்புகேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு சூலம், வேல் வடிவில் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் ரமேஷ் செய்திருந்தார்.


Next Story