சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை


சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை
x

ஆடி கிருத்திகையையொட்டி சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது.

கன்னியாகுமரி

சுசீந்திரம்:

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கிருத்திகையையொட்டி திருவிளக்கு பூஜை வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதே போல் நேற்று சுசீந்திரத்தை சேர்ந்த துர்கா வழிபாட்டு குழு சார்பில் 38-வது ஆண்டு திருவிளக்கு பூஜை முருகன் சன்னதி முன்பு இரவு 7 மணிக்கு நடந்தது. இதில் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டு 1008 திருவிளக்கு பூஜை வழிபாடு நடத்தினர். முன்னதாக சாஸ்தா சன்னதி முன்பு ஆளுயர தாய்விளக்கு வைக்கப்பட்டு அதில் விளக்கேற்றி அதனைத் தொடர்ந்து பெண்கள் தங்கள் விளக்குகளை ஏற்றி 108 திருவிளக்கு மந்திரங்கள் சொல்லி திருவிளக்கு பூஜை வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், வழிபாட்டு மன்றமும் இணைந்து செய்திருந்தன.


Next Story