தஞ்சை பெரிய கோவிலில் 1037-ம் ஆண்டு சதய விழா - கொட்டும் மழையில் பக்தர்கள் பங்கேற்பு


தஞ்சை பெரிய கோவிலில் 1037-ம் ஆண்டு சதய விழா - கொட்டும் மழையில் பக்தர்கள் பங்கேற்பு
x

இன்று பெய்த மழையின் காரணமாக, விழா நடைபெறும் அரங்கில் முழங்கால் அளவு மழைநீர் சூழ்ந்திருக்கிறது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில், இன்று மாலை கருமேகங்கள் சூழ்ந்த கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனிடையே தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா, இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. தஞ்சை பெரிய கோவிலில் நடைபெறும் இந்த விழாவில் பரதநாட்டியம், கவிஅரங்கம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எளிமையான முறையில் சதய விழா நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டு சிறப்பான முறையில் சதய விழா நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று பெய்த மழையின் காரணமாக, விழா நடைபெறும் அரங்கில் முழங்கால் அளவு மழைநீர் சூழ்ந்திருக்கிறது. இருப்பினும் பொதுமக்கள் கனமழையையும் பொருட்படுத்தாமல், சதய விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்று அங்கு நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை ரசித்து வருகின்றனர்.


Next Story