வால்பாறையில் சதுர்த்தியை முன்னிட்டு 108 விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை


வால்பாறையில் சதுர்த்தியை முன்னிட்டு 108 விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை
x
தினத்தந்தி 18 Sept 2023 1:00 AM IST (Updated: 18 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் சதுர்த்தியை முன்னிட்டு 108 விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் சதுர்த்தியை முன்னிட்டு 108 விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

108 விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதன்படி வால்பாறையிலும் விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. இதை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 80-க்கும் மேற்பட்ட கோவில்கள் மற்றும் பொது இடங்களில் வழிபாட்டுக்காக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக வால்பாறை பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்காக 108 விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு கோவில்களின் பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது.

முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம்

இன்று பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் வழிபாடுகளுக்கு பின்னர் வருகிற 24-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கொண்டுவரப்படுகிறது. அங்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகள் மத சொற்பொழிவுகள் முடிந்த பின்னர் வால்பாறையின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று நடுமலை ஆற்றில் கரைக்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணியினர் செய்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தியை யொட்டி போலீசார் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story