பாலையூர் வேதபுரீஸ்வரர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை


பாலையூர் வேதபுரீஸ்வரர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
x

பாலையூர் வேதபுரீஸ்வரர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவையொட்டி வேதபுரீஸ்வரர், வேதநாயகி மற்றும் விநாயகர் உற்சவர் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கோவில் அர்ச்சகர் முத்து சுந்தர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் லலிதா சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்தனர். அப்போது 108 பெண்கள் குத்து விளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபட்டனர். இதில் பாலையூர் மற்றும் அருகே உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story