கருமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை


கருமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
x

கருமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

நாகப்பட்டினம்

நாகை காடம்பாடி மறைமலைநகரில் வேப்பிலைகாரி என்கிற கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி பூச்சொரிதல், சக்திகரகம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தினமும் சிறப்பு பூஜைகள், சாமி புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. கடந்த 23-ந்தேதி பால்குடகாவடி, அலகு காவடி ஆகியவை நடந்தது. நேற்றுமுன்தினம் இரவு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.


Next Story