விழுப்புரம் சிவ விஷ்ணு கோவிலில் 108 திருவிளக்கு பூஜை


விழுப்புரம் சிவ விஷ்ணு கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
x

விழுப்புரம் சிவ விஷ்ணு கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மேற்கில் உள்ள கோவிந்தசாமி நகர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவ விஷ்ணு கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நேற்று மாலை நடைபெற்றது. இதனை அமிர்த கணபதி அறக்கட்டளை நிறுவனர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். திருவிளக்கு பூஜை குழு செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் சிவக்குமார், அறக்கட்டளை துணைத்தலைவர் ஜெகதாம்பாள், உறுப்பினர் முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாட்டை கோவில் குருக்கள் கார்த்திக் செய்திருந்தார்.

1 More update

Next Story