108 ஆம்புலன்சு சேவை திட்டத்தை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தல்


108 ஆம்புலன்சு சேவை திட்டத்தை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தல்
x

108 ஆம்புலன்சு சேவை திட்டத்தை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் கவுல்பாளையத்தில், 108 ஆம்புலன்சு தொழிலாளர் சங்கத்தின் 6-வது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு சங்கத்தின் மாநில தலைவர் வரதராஜ் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட தலைவர் பாபு வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், தென்னிந்திய பொதுச் செயலாளர் ஆனந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

தமிழகத்தில் 108 ஆம்புலன்சுகளை இரவு நேரங்களில் இயக்க மறுத்தும், ஏற்கனவே ஒரு பகுதியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆம்புலன்சுகளை வேறு புதிய இடத்தில் இயக்கப்படுவதாக கணக்கு காட்டும் செயலையும் கைவிட்டு, பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப ஆம்புலன்சு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஊதியம் வழங்க மறுப்பது, மகப்பேறு விடுப்பை காரணம் காட்டி பணி நீக்கம் அல்லது பணியிட மாற்றம் செய்வது, பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை அவுட்சோர்சிங் முறையில் நடத்திவரும் தனியார் நிறுவனத்தை ஆம்புலன்சு சேவை திட்டத்தில் இருந்து வெளியேற்றி, இந்த திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு அரசு பள்ளி பெற்றோர் ஆசிரியர் மாணவர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ் மாநாட்டை வாழ்த்தி பேசினார். இதில் மாநில பொருளாளர் சாமிவேல், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தங்கராஜ், சுரேஷ்குமார் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story