10-வது நாளாக அண்ணாமலை பாதயாத்திரை


10-வது நாளாக அண்ணாமலை பாதயாத்திரை
x
தினத்தந்தி 6 Aug 2023 9:37 AM IST (Updated: 6 Aug 2023 11:42 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண்-என் மக்கள்' பாதயாத்திரையை மதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றம் பகுதியில் தொடங்கினார்.

மதுரை,

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 'என் மண் என் மக்கள்' என்ற பாதயாத்திரையை கடந்த ஜூலை 28ஆம் தேதி தொடங்கினார். இந்த பாதயாத்திரையை ராமேசுவரத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் 10-வது நாளாக பாஜக மாநில தலைவர் அண்னாமலை பாதயாத்திரை மேற்கொள்கிறார். முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்திலிருந்து இன்று தொடங்கியது என் மண் என் மக்கள் யாத்திரை என அண்ணாமலை குறிப்பிட்டார்.


Next Story