காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் முதுகலை படிப்புக்கு 11-ந்தேதி கலந்தாய்வு
காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் முதுகலை படிப்புக்கு 11-ந்தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது.
காரைக்குடி
காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2023-2024-ம் கல்வியாண்டிற்கான முதுநிலைப்பாடங்களுக்கான மாணவர் சேர்க்கை வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளது. மேலும் முதுகலைப்படிப்புகளான எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், எம்.காம், மற்றும் முதுநிலை அறிவியல் படிப்புகளான எம்.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், புவி அமைப்பியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வும் அன்றைய தினம் நடைபெறுகிறது. அன்று காலை 9 மணிக்கு சிறப்பு பிரிவினருக்கும், காலை 10 மணிக்கு பொதுப் பிரிவினருக்கும் கல்லூரியில் அந்தந்த துறைகளில் கலந்தாய்வு நடைபெற உள்ளதால் விண்ணப்பித்த மாணவர்கள் இணைய வழியில் விண்ணப்பித்த 2 விண்ணப்ப படிவம் மற்றும் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.