துணைத்தலைவர் உள்பட 11 தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு


துணைத்தலைவர் உள்பட 11 தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x

வத்திராயிருப்பு பேரூராட்சி கூட்டத்தில் துணைத்தலைவர் உள்பட11 தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது.இதில் பேரூராட்சி தலைவராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சார்ந்த தவமணி என்பவர் உள்ளார். இதில் 11 தி.மு.க. கவுன்சிலர்களும், 5 இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்களும், 1 அ.தி.மு.க., 1 சுயேச்சையும் உள்ளனர். இந்நிலையில் நேற்று வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர் கூட்டத்தில் முறையான கணக்கு வழக்குகளை தெரிவிப்பதில்லை எனக் கூறி தி.மு.க. கவுன்சிலர்கள் தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் முறையாக தலைவர் மற்றும் செயல் அலுவலர் பதில் தெரிவிக்காத நிலையில் பேரூராட்சி துணைத்தலைவர் பஞ்சு உள்பட 11 தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறினர். தலைவர் வார்டை தவிர பிற வார்டுகளுக்கு பணிகளை தரவில்லை எனவும் குற்றம் சாட்டினர். ஆளும் தி.மு.க. கட்சியின் கவுன்சிலர்களே கூட்டத்தை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story