11 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
விராலிமலை அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடருந்து 11 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விராலிமலை:
புகையிலை பொருட்கள் விற்பனை
விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடத்தது. அந்த தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் முல்லையூர் மற்றும் வேலூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது முல்லையூர் குளத்து ஆத்துப்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ரவிச்சந்திரன் (வயது 32) என்பவர் பூமரம் ஆத்துப்பட்டி அருகே உள்ள மளிகைக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
11 கிலோ பறிமுதல்
இதேபோல் வேலூரை சேர்ந்த துரைச்சாமி மனைவி அஷினாபேகம் (39) என்பவர் அவரது பெட்டிக்கடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்வததை போலீசார் கண்டு பிடித்தனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் 2 பேர்களிடமிருந்து 2 செல்போன்கள், ஸ்கூட்டர் மற்றும் 11 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.