வீட்டில் 11¼ பவுன் நகை திருட்டு
சூரமங்கலம்:-
சேலம் நரசோதிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருணா (வயது 38). இவர் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் சூரமங்கலம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 11¼ பவுன் தங்க நகைகள் திருட்டு போனது. அதனை நாங்கள் வசிக்கிற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர்கள் திருடி சென்றதாக சந்தேகம் தெரிவித்திருந்தார். அதன்பேரில் சூரமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire