1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ஓடும் ரெயிலில் கடத்தப்பட்ட 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்
ஆந்திர மாநிலம் நகரிப்புத்தூர் ரெயில் நிலையத்தில் வேலூர் பறக்கும் படை தனி தாசில்தார் விநாயகமூர்த்தி, நகரிப்புத்தூர் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் பறக்கும் படை குழுவினர், போலீசார் கூட்டாக இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அந்தவழியாக செல்லும் ரெயில்களில் சோதனை செய்ததில் பயணிகளின் இருக்கையின் கீழ் 61 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை திருவலத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story