செந்துறை ஒன்றியத்தில் 112 புதிய வளர்ச்சி திட்ட பணிகள்-அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்


செந்துறை ஒன்றியத்தில் 112 புதிய வளர்ச்சி திட்ட பணிகள்-அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
x

செந்துறை ஒன்றியத்தில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் 112 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

அரியலூர்

112 புதிய வளர்ச்சி திட்ட பணிகள்

அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.35 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் 112 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார்.

செந்துறை ஒன்றியத்தில் சின்ன ஆனந்தவாடி, ஆனந்தவாடி, உஞ்சினி, பரணம், செம்மண்பள்ளம், கீழமாளிகை, நல்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் ரூ.3 கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் 15 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளையும், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆதிச்சனூர், வெண்மான்கொண்டான், சுத்தமல்லி, பருக்கல், கார்குடி, குஞ்சுவெளி, குணமங்கலம், கீழநத்தம், கடம்பூர் ஆகிய பகுதிகளில் ரூ.13 ேகாடியே 58 லட்சம் மதிப்பீட்டில் 25 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

செம்புரான் ஏரியை ஆழப்படுத்துதல்

செந்துறை ஒன்றியம், பெருமான்டி கிராமத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.172.70 லட்சம் மதிப்பீட்டில் நக்கம்பாடி முதல் பெருமான்டி வரை தார் சாலை அமைத்தல் பணியினையும், குழுமூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10.29 லட்சம் மதிப்பீட்டில் செம்புரான் ஏரியை ஆழப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் பணியினையும் தொடங்கி வைத்தார்.

சிறுகளத்தூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.84 லட்சம் மதிப்பீட்டில் சிறுகளத்தூர் பெரிய ஏரி ஆழப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் பணியினையும், ரூ.2.33 லட்சம் மதிப்பீட்டில் சிறுகளத்தூர் ஊராட்சியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி உள்பட 112 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

இந்தநிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இலக்குவன், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் பிரபாகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story