அதிக பாரம் ஏற்றிய 12 வாகனங்கள் பறிமுதல்
வாகன சோதனையில் அதிக பாரம் ஏற்றிய 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
செங்கல்பட்டு
சென்னையை அடுத்த ஆலந்தூரில் உள்ள மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மீனம்பாக்கம், பரங்கிமலை, கத்திப்பாரா ஆகிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 207 வாகனங்கள் முழுமையாக சோதனையிடப்பட்டது. அதில் அதிக வேகம், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் போன்ற பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தாதது போன்ற பல்வேறு விதிமுறைகளை மீறிய 89 வாகனங்களுக்கு அறிக்கை வழங்கப்பட்டது. இந்த வாகனங்களுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதில் அதிக பாரம் ஏற்றிய 12 வாகனங்களும், விதிமுறைகளை மீறியதாக 8 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story