திருமானூர் அருகே வெடி விபத்தில் 12 பேர் பலி: மனித உரிமை ஆணைய உறுப்பினர் நேரில் ஆய்வு


திருமானூர் அருகே வெடி விபத்தில் 12 பேர் பலி: மனித உரிமை ஆணைய உறுப்பினர் நேரில் ஆய்வு
x

திருமானூர் அருகே வெடி விபத்தில் 12 பேர் பலியான இடத்தில் மனித உரிமை ஆணைய உறுப்பினர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் கடந்த 9-ந் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்து அரியலூர், தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் விபத்து ஏற்பட்ட இடத்தை தமிழ்நாடு மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, தொழில் துறை பாதுகாப்பு அலுவலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகாவிடம் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கேட்டறிந்தார். மேலும் விரகாலூர் அண்ணா நகரில் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.


Next Story