தேயிலை வாரியம் ரூ.12¾ லட்சம் நிதியுதவி
அய்யன்கொல்லி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு தேயிலை வாரியம் ரூ.12¾ லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
பந்தலூர்
வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் அய்யன்கொல்லி பகுதியில் மலநாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து காபி, குறுமிளகு, இஞ்சி, வாழைக்காய் போன்றவற்றை வெளிச்சந்தையை விட கிலோவுக்கு ரூ.2 விலை கொடுத்து கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படுகிறது. 2022-2023-ம் ஆண்டு ரூ.1 கோடியே 10 லட்சம் வர்த்தகம் நடந்தது. நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் இதுவரை ரூ.1 கோடியே 85 லட்சம் வரை வர்த்தகம் செய்து உள்ளனர். உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாட்டை கருத்தில் கொண்டு, நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள விவசாயிகள் உபகரணங்களை கொள்முதல் செய்வதற்காக தேயிலை வாரியம் மூலம் ரூ.12 லட்சத்து 85 ஆயிரத்துக்கான காசோலையை அலுவலர் வருண் மேலன் வழங்கினார். இதில் நிறுவன தலைவர், இயக்குனர்கள், வேளாண் விற்பனை, வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் லட்சுமணன் கலந்துகொண்டனர். இந்த நிறுவனம் சிறப்பாக செயல்பட வேளாண் துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.