விபத்தில் பள்ளி மாணவர்கள் 12 பேர் காயம்


விபத்தில் பள்ளி மாணவர்கள் 12 பேர் காயம்
x

புளியங்குடியில் நடந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 12 பேர் காயம் அடைந்தனர்.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி- சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் உள்ள தனியார் ஆங்கிலப் பள்ளியில் இருந்து நேற்று மாலை பள்ளி வாகனம் பள்ளியில் இருந்து மெயின் ரோட்டிற்கு வந்தது. அப்போது புளியங்குடி வழியாக கோவில்பட்டி சென்ற சொகுசு கார், பள்ளி வாகனத்தின் பக்கவாட்டில் எதிர்பாராதவிதமாக வேகமாக மோதியது. இதில் பள்ளி வாகனத்தில் இருந்த 12 மாணவர்கள் காயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மோதிய வேகத்தில் காரும் பலத்த சேதமடைந்தது. காரில் உள்ள ஏர் பேக் திறந்ததால் ஓட்டுனர் காயமில்லாமல் உயிர் தப்பினார். தகவல் அறிந்ததும் புளியங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாகனங்களை அப்புறபடுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story