பராமரிப்பு பணி காரணமாக சேலம் வழியாக செல்லும் 12 ரெயில்கள் ரத்து


பராமரிப்பு பணி காரணமாக சேலம் வழியாக செல்லும் 12 ரெயில்கள் ரத்து
x

பராமரிப்பு பணி காரணமாக சேலம் வழியாக செல்லும் 12 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

சேலம்

சூரமங்கலம்:

சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிழக்கு ரெயில்வேயில் ஹவுரா ெரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளன. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக செல்லும் கீழ்கண்ட ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

கோவை- சில்சார் (வண்டி எண் 12515) எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 27-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. சில்சார்- கோவை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12516) நாளை மறுநாளும் (செவ்வாய்க்கிழமை), திருவனந்தபுரம்-சில்சார் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12507) நாளை மறுநாளும், சில்சார்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12508) 24-ந் தேதியும், எர்ணாகுளம்-பாட்னா எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22643) நாளை, நாளை மறுநாளும், பாட்னா- எர்ணாகுளம் வண்டி எண் (22644) 24, 25-ந் ேததிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம்- சாலிமர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22641) 24, 26-ந் தேதிகளிலும் சாலிமர்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22642) இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 22, 27, 29-ந் தேதிகளிலும், சந்திரகாசி- மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22851) 24-ந் தேதியும், மங்களூரு சென்ட்ரல்-சந்திரகாசி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22852) 26-ந் தேதியும் ரத்து செய்யப்படுகிறது.

ஹவுரா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22877) 26-ந் தேதியும், எர்ணாகுளம்- ஹவுரா எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22878) நாளை (திங்கட்கிழமை) மற்றும் 28-ந் தேதியில் ரத்து செய்யப்படுகிறது. மேலும் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story