12 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை; ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது


12 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை; ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது
x

12 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் பழைய ரெயில் நிலையம் அருகில் அம்பேத்கர் நகரில் வசித்து வந்த 12 வயதான சிறுமியின் வயிறு பெரியதாக இருந்ததால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டு நேற்று முன்தினம் அதிகாலை சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக சிறுமியின் தாய் காஞ்சீபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரஞ்சித் (26) என்பரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும் காஞ்சீபுரம் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.


Next Story