சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேர் கைது


சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேர் கைது
x
தினத்தந்தி 14 Sept 2023 1:00 AM IST (Updated: 14 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

காரமடையில், தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

காரமடை

காரமடை கண்ணார்பாளையம் சாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு மத்திய அரசே காரணம் எனக்கூறி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் அவர்கள், திடீரென சாலையில் அமர்ந்து மறியல் ஈடுபட்டனர். உடனே தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 120 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story