காஞ்சீபுரம் மாவட்டத்தில் 13¼ லட்சம் வாக்காளர்கள் - கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 13¼ லட்சம் வாக்காளர்கள் - கலெக்டர் தகவல்
x

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 13 லட்சத்து 38 ஆயிரத்து 654 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.

காஞ்சிபுரம்

இறுதி வாக்காளர் பட்டியல்

காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு உள்ளடங்கிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023-க்கான இறுதி வாக்காளர் பட்டியல் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம், மற்றும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டது.

இறுதி வாக்காளர் பட்டியலை காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா பெற்று கொண்டார்.

அப்போது கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கூறியதாவது:-

13 லட்சத்து 38 ஆயிரத்து 654 வாக்காளர்கள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 6 லட்சத்து 51 ஆயிரத்து 480 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 86 ஆயிரத்து 994 பெண் வாக்காளர்களும், 180 இதர வாக்காளர்களும் என மொத்தம் 13 லட்சத்து 38 ஆயிரத்து 654 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும் 1,500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடி மையங்களை கண்டறிந்து வாக்காளர்கள் எந்த சிரமமும் இன்றி வாக்களிக்க ஏதுவாக அவற்றில் மற்றொரு வாக்குச்சாவடி மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி மையம் புதியதாக ஏற்படுத்தப்பட்டு தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1394 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் தற்போதைய வாக்காளர்களின் விவரம் பின்வருமாறு:-

ஆலந்தூர் தொகுதியில் ஆண்கள்-1 லட்சத்து 90 ஆயிரத்து 858, பெண்கள்-1 லட்சத்து 95 ஆயிரத்து 336, இதரர்-57, மொத்தம் -3 லட்சத்து 86 ஆயிரத்து 251 பேர்.

ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் ஆண்கள்-1 லட்சத்து 79 ஆயிரத்து 638 பேர். பெண்கள்-1 லட்சத்து 90 ஆயிரத்து 135. இதரர்- 60, மொத்தம்- 3 லட்சத்து 69 ஆயிரத்து 833 பேர்.

உத்திரமேரூர் தொகுதியில் ஆண்கள்- 1 லட்சத்து 29 ஆயிரத்து 282, பெண்கள்- 1 லட்சத்து 39 ஆயிரத்து 80, இதரர்- 43. மொத்தம் -2 லட்சத்து 68 ஆயிரத்து 405 பேர்.

காஞ்சீபுரம் தொகுதியில் ஆண்கள்- 1 லட்சத்து 51 ஆயிரத்து 702, பெண்கள்-1 லட்சத்து 62 ஆயிரத்து 443. இதரர்- 20. மொத்தம்- 3 லட்சத்து 14 ஆயிரத்து 165 பேர்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆண்கள்- 6 லட்சத்து 51 ஆயிரத்து 480 பேர். பெண்கள்- 6 லட்சத்து 86 ஆயிரத்து 994 பேர். இதரர்-180 பேர். மொத்தம்- 13 லட்சத்து 38 ஆயிரத்து 654 பேர் உள்ளனர்.

நேரடியாக பார்வையிடலாம்

இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், தாசில்தார் மற்றும் மாநகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் அலுவலக நேரங்களில் இந்த இறுதி வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story