கோவை மத்திய சிறையில் இருந்து பெண் உள்பட 13 கைதிகள் விடுதலை


கோவை மத்திய சிறையில் இருந்து பெண் உள்பட 13 கைதிகள் விடுதலை
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கோயம்புத்தூர்

கோவை

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா அமுத பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் சிறு, சிறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இதன்படி கோவை மத்திய சிறையில் இருந்து பெண் உள்பட 13 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு கோவை மத்திய சிறையில் இருந்து சிறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கியவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. நேற்று முன்தினம் 6 பேரும், நேற்று 7 பேரும் என மொத்தம் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story