தேனியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 13 கடைகள் இடித்து அகற்றம்


தேனியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 13 கடைகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 28 Sept 2023 2:30 AM IST (Updated: 28 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 13 கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

தேனி

தேனி நகரில், பெரியகுளம் சாலையில் உள்ள குட்செட் சாலை சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. நீண்டகாலமாக இந்த கடைகள் செயல்பட்டதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடைகளின் உரிமையாளர்களுக்கு மாநில நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு வந்தனர்.

ஆனால் ஆக்கிரமிப்பு செய்தவர்களே கடைகளை காலி செய்தனர். அங்கிருந்த பொருட்களை அப்புறப்படுத்தினர். பின்னர் கடைகளின் சுவர்களை பொக்லைன் எந்திரம் மூலம் நெடுஞ்சாலைத்துறையினர் இடித்து தரைமட்டமாக்கினர். அதன்படி, பெரியகுளம் சாலையில் பெத்தாட்சி விநாயகர் கோவிலில் இருந்து மின்வாரிய பண்டக சாலை வரை இருந்த 13 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.


Next Story